top of page

வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா?


இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதின் மூலம் வேதத்தை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். வேதம் நம் வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால், வேதம் அடிப்படையிலே நிலையான அழுத்தத்தை நமக்கு கொடுக்கிறது. வேதம் தேவனுடைய வார்த்தை என்றால், நாம் அதிலே பலனடைந்து அதை படித்து அதற்கு கீழ்படிந்து முழவதுமாய் அதை நம்ப வேண்டும். தேவன் நமக்கு வேதத்தை கொடுத்ததின் நோக்கம். அவர் நம்மில் வைத்த அன்பின் உதாரணம், ஆதாரமும் ஆகும். "வெளிப்படுத்தல்" என்ற வார்த்தையின் அர்த்தம் தேவன் மனுமக்களோடு சரியான உறவை வைத்துக்கொள்ளுதல் மற்றும் மனுமக்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளுதல் ஆகும். தேவன் இவைகளை வேதத்தில் வெளிப்படுத்தாதிருந்தால் நாம் அறிந்திருக்க முடியாது. 1500ஆண்டுகளுக்கு மேலாக தேவன் தன்னை வெளிப்படுத்தினதை வேதத்தின் மூலம் காணலாம். மனிதன் தேவனோடு எப்படி சரியான உறவை வைத்துக்கொள்வது என நமக்கு வெளிப்படுத்துகிறது. நம்முடைய தனிப்பட்ட காரியங்களுக்கும், விசுவாச சம்மந்தபட்ட காரியங்களுக்கும் வேதமே முழு அதிகாரம் நிறைந்ததாய் இருக்க வேண்டும். வேதம் தேவனுடைய வார்த்தையா? அல்லது ஒரு நல்ல புத்தகமா? என்று எப்படி அறிவது? இதுவரை எந்த மத புஸ்தகத்திலும் எழுதப்படாத ஒற்றுமை வேதத்தில் உண்டு அது என்ன? வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தைதானா? ஆதாரம் உண்டா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு வேதத்தை நாம் சரியாக ஆராய்வோம் என்றால், தேவனுடைய வார்த்தைகளாக அருளப்பட்ட வேதவசனங்களில் போதுமான பதில் கிடைக்கும். வேதம் தேவனுடைய வார்ததை என்பது சந்தேகமே இல்லை. (2 தீமோ.3:15-17) வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்திற்கும். கடிந்து கொள்ளுதலுக்கும். சீர்திருத்தலுக்கும், நீதியைபடிப்பித்தலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாய் இருக்கிறது என்று சொல்லுகிறது. வேத வசனங்கள் தேவனால் அருளப்பட்டபைகள்தானா? அவைகள் உண்மைதானா என்பதை அறிய இன்று வேதத்தின் உள்ளடங்கிய ஆதாரங்கள் அவசியம். வேதத்தின் உள்ளடங்கிய ஆதாரங்கள் முதல் ஆதாரம் அவைகள் 66 புஸ்தகங்களாயிருந்தாலும் அவைகள் எல்லாம் ஒரே குறிக்கோள் உடையதாயிருக்கிறது. மூன்று கண்டத்தில் மூன்று வித்தியாச மொழிகளை கொண்டு, வித்தியாசமான வாழ்கை, நடத்தை கொண்ட 40க்கும் அதிகமான மக்களால் எழுதப்பட்டாலும், துவக்க முதல் முடிவு மட்டும் எந்த முரண்பாடும் இல்லாமல் ஒன்றுபட்ட ஒரே புஸ்தகம். வேறே எந்த ஒரு புஸ்தகத்திலும் இல்லாத ஒற்றுமை வேதத்தில் இருப்பதினால் இது தேவ ஆவியானவரால், தேவ பிள்ளைகளைக் கொண்டு எழுதப்பட்டது என்பது நிரூபனமானகிறது. வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை அதின் தீர்க்கதரிசன வசனங்கள் நிரூபிக்கிறது. வேதத்தில் அதிகமான தீர்க்கத்தரிசனங்கள் அடங்கியிருக்கிறது ஒரு தேசத்தை குறித்ததான எதிர்காலம் , ஒரு மனிதனை குறித்ததான எதிர்காலம். யார் மேசியாவாக வரப்போவது? இரட்சகர் யார்? என்று இயேசு கிறிஸ்துவை குறித்து மாத்திரம் முன்னூறுக்கும் அதிகமான தீர்க்கதரிசன வசனங்கள் பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ளது இயேசு கிறிஸ்து யாருடைய குடும்பத்தில் பிறப்பார்? எப்படி, எங்கே பிறப்பார்? எப்படி மரிப்பார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார். வேதத்தின் தீர்க்கதரிசனங்கள் ஒன்றும் தவறிபோனதில்லை வேறு எந்த மத புத்தகமும் வேதத்தை போன்று பின் நடக்க போகின்றவைகளை முன்பாகஅறிவித்ததில்லை. மூன்றாவது வேதத்தின் ஒற்றுமையும், வல்லமையும் தேவவசனம் தான் என்று நிரூபிக்கிறது. பாவிகள் மனந்திரும்புகிறார்கள், ஓரினச் சேர்கையில் கட்டுண்டவர்கள் விடுதலையாகிறார்கள், கடினமுள்ள குற்றவாளிகள் மனம் திரும்புகிறார்கள். போதைக்கு அடிமையானவர்கள் சுகம் அடைகிறார்கள், அன்பு கூறாதவர்கள் அன்பு கூறுகிறார்கள். வேதம் இப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வரக்கூடிய வல்லமையுடையது ஏனென்றால் வேதம் உண்மையிலே தேவனுடைய வார்த்தை. வேதத்தின் வெளிப்புற ஆதாரங்களும், வேதம் உண்மையிலே தேவ வசனம் என்று நிரூபிக்கிறது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த சான்று மற்றும் அனேக சரித்திர சான்றுகளும் உண்டு. உண்மைகள் நிறைந்த. சரியான காலங்கள் கொண்ட சரித்திர ஆதாரங்கள் உண்டு. வேதத்தில் உள்ள காலங்கள் நேரங்கள் எல்லாம் உண்மை என்றும்இ எந்த ஒரு புஸ்தகத்திற்கும் இல்லாத உண்மையான சரித்திர ஆதாரங்கள் வேதத்திற்கு உண்டு என்று சரித்திர ஆசிரியரும், தொல்பொருள் ஆராய்சியாளர்களும் வேதம் உண்மை என்றும் வேதவசனம் தேவனுடைய வார்த்தை என்றும் நிரூபிக்கின்றனர்.

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page