top of page

பரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்?



பரிசுத்த ஆவியானவர் யார் என்பதைக் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு மாயமான சக்தி என்று சிலர் நினைக்கின்றனர். வேறு சிலரோ பரிசுத்த ஆவி கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்காக தேவனால் அளிக்கப்படும் ஆள்தத்துவம் இல்லாத சக்தி என்று நினைக்கின்றனர். பரிசுத்த ஆவியானவரைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? சுருக்கமாகக் கூறினால், பரிசுத்த ஆவியானவர் தேவன் என்று வேதாகமம் பறைசாற்றுகின்றது. மேலும், பரிசுத்த ஆவியானவர் தெய்வீகத் தன்மை உடையவர்; சிந்தை, உணர்வுகள் மற்றும் சித்தம் அனைத்தும் உடைய ஒரு நபர் என்றும் வேதாகமம் கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பது வேதாகமத்தின் பல இடங்களில் தெளிவாகக் காணப் படுகிறது உதாரணமாக, அப்போஸ்தலர் 5: 3-4. இந்த வசனங்களில் பேதுரு அனனியாவிடம் அவன் ஏன் பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் கூறினான் என்று, அவன் “மனிதனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னான்” என்றும் கண்டிக்கிறான். இது பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் கூறுவது என்பது தேவனிடத்தில் பொய் கூறுவதாகும் என்பதைக் காட்டுகின்றது. மேலும், தேவனுக்குரிய குணாதியங்களை உடையவராயிருப்பதாலும் பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, அவர் சர்வவியாபிகர் என்பதை சங்கீதம் 139: 7-8 ல் அறியலாம். “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.” மேலும், 1 கொரிந்தியர் 2: 10-11 வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் சர்வத்தையும் அறிந்தவர் என்பதையும் நாம் அறியலாம், “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்துருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.” மேலும், பரிசுத்த ஆவியானவர் சிந்தை, உணர்வுகள் மற்றும் சித்தம் உடையவராயிருப்பதால் அவர் தெய்வீகத்தன்மை உடையவர் என்று நாம் அறியலாம். பரிசுத்த ஆவியானவர் சிந்திக்கிறவர் மற்றும் அறிகிறவர் (1 கொரிந்தியர் 2: 10). பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தமுடியும் (எபேசியர் 4:30). ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26-27). அவர் தமது சித்தத்தின் படி தீர்மானிக்கிறார் (1 கொரிந்தியர் 12:7-11). பரிசுத்த ஆவியானவர் தேவன், திரித்துவத்தில் மூன்றாம் நபர். இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்ததுபோல் தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் உண்மையாகவே தேற்றரவாளனாகவும், போதிக்கிறவராகவும் செயல்படமுடியும். (யோவான் 14: 16,26; 15:26)

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page