top of page

நான் ஏன் தற்கொலை செய்யக்கூடாது?


ஒருவேளை இப்போது அந்த நிலையில் இருப்பாயானால், அது நம்பிக்கையின்மை, மனக்கசப்பு போன்ற பல உணர்வுகளோடிருப்பாய். நீ ஒரு ஆழமான பாதாளத்தில் இருப்பது போல் உணரக்கூடும், மேலும் இதற்கு மேல் எதுவும் சரியாகும் என்ற நம்பிக்கையேயில்லாமல் போய்விடும். நீ எந்த நிலைமையில் இருக்கிறாய் என்று யாரும் கவலைப்படவோ, உணர்ந்துகொள்ளவோ இல்லாதது போல் தோன்றும். வாழ்க்கை வாழ்வதில் ஒரு பயனுமில்லை ... அல்லது இருக்கின்றதா? இத்தருணத்தில் ஒரு சில மணித்துளிகள் எடுத்து, தேவனை உன் வாழ்வின் உண்மையாக தேவனாக எண்ணுவாயானால், அவர் எவ்வளவு பெரியவர் என்பதை நிரூபிப்பார்; ஏனென்றால், “தேவனால் கூடாதது ஒன்றுமில்லை” (லூக்கா 1:37). ஒருவேளை கடந்தகால காயங்களின் தழும்புகள், உன்னை நிராகரிக்கப்பட்டு, கைவிடப்பட்டவனைப் போன்ற உணர்வுக்குள்ளாக்கி அடக்கிவைத்திருக்கலாம். இது சுய பச்சாதாபம், கோபம், கசப்பு, பழிவாங்கும் எண்ணங்கள், அல்லது தேவையில்லாத பயங்கள் போன்றவை முக்கியமான உறவுகளில் பிரச்சனைகளைக் கொண்டு வந்திருக்கலாம். நீ ஏன் தற்கொலை செய்யக்கூடாது? நண்பனே, உன் வாழ்வின் காரியங்கள் எவ்வளவு மோசமாயிருந்தாலும் சரி, உன்னைக் கலக்கத்தின் பாதையினூடே நடத்தி, அவரது அற்புத வெளிச்சத்திற்கு உன்னைக் கொண்டு வர, உனக்காக அன்பின் தேவன் காத்துக் கொண்டிருக்கிறார். அவரே உனது நிச்சயமான நம்பிக்கை, அவரது நாமம் இயேசு! பாவமற்ற தேவகுமாரனாகிய இந்த இயேசு நீ கைவிடப்பட்டு, தாழ்மைப்படுத்தப் பட்ட நேரத்தில் உன்னோடிருக்கின்றார். ஏசாயா 53:2-6ல் ஏசாயா தீர்க்கதரிசி அவரைக் குறித்து, அவர் எல்லோராலும் “அசட்டை பண்ணப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவரும்” என்று சித்தரிக்கிறார். அவரது வாழ்வு முழுவதும் துக்கம் மற்றும் பாடுகள் நிறைந்ததாயிருந்தது. ஆனால் அவர் சுமந்த துக்கம் அவருடையதல்ல, நம்முடையது. அவர் குத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, நொறுக்கப்பட்டார், எல்லாமே நம்முடைய பாவங்களுக்காக. அவருடைய பாடுகளினாலே, நம்முடைய வாழ்வு மீட்கப்பட்டு, முழுமையடைய முடியும். நண்பனே, உன்னுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட வேண்டுமென்று அவர் எல்லாவற்றையும் சகித்தார். நீ எவ்வளவு பெரிய குற்றத்தைச் சுமந்தாலும் சரி, நீ தாழ்மையோடு அவரை உனது இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவர் உன்னை மன்னிப்பார் என்பதை அறிந்துகொள். “...ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்...” (சங்கீதம் 50:15). நீ செய்த பாவம் எவ்வளவு பெரியதாயிருந்தாலும், இயேசுவால் மன்னிக்கமுடியும். அவரது ஒரு சில பிரியமான தாசர்கள் கூட மோசமான பாவங்களான கொலை (மோசே), விபச்சாரம் மற்றும் கொலை (தாவீது ராஜா), உடல் மற்றும் உணர்வுரீதியாகக் காயப்படுத்துதல் (பவுல் அப்போஸ்தலன்) செய்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மன்னிப்பைப் பெற்று, தேவனுக்குள் புதிய வாழ்வைக் கண்டடைந்தனர். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” (2 கொரிந்தியர் 5:17). நீ ஏன் தற்கொலை செய்யக்கூடாது? நண்பனே, தேவன் “உடைந்ததைச்” சரிசெய்யத் தயாராயிருக்கிறார், அதாவது உன்னுடைய வாழ்வை, நீ தற்கொலை மூலம் முடிக்க எண்ணின உன்னுடைய வாழ்வைத் சரிசெய்யத் தயாராயிருக்கிறார். ஏசாயா 61:1-3ல் தீர்க்கதரிசி, “சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும்... துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்.” என்று எழுதுகிறார். இயேசுவிடம் வா, அவர் நீ அவரை நம்புவதினால் அவர் உன் சந்தோசத்தை திரும்பவும் தந்து, உன்னை உபயோகமுள்ளவனாக மாற்றட்டும். இழந்துபோன உன்னுடைய சந்தோசத்தை அவர் புதிப்பித்து, உன்னை நிலை நிறுத்த புதிய ஆவியை உனக்குத் தருவேன் என்று வாக்களிக்கிறார். உன்னுடைய உடைந்து போன இருதயம் அவருக்கு விலையேறப்பெற்றது: “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்கீதம் 51:12, 15-17). ஆண்டவரை உன் இரட்சராகவும், மேய்ப்பராகவும் ஏற்றுக் கொள்வாயா? அவர் உன்னை ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையின் (வேதாகமம்) மூலம் வழி நடத்துவார். நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்கீதம் 32:8). “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (ஏசாயா 33:6). கிறிஸ்துவுக்குள்ளிருக்கும்போதும் உனக்குப் பிரச்சனைகளிருக்கும், ஆனால் இப்போது உனக்கு நம்பிக்கையுண்டு. அவரே “சகோதரனிலும் அதிக சொந்தமாய் சிநேகிப்பவர்” (நீதிமொழிகள் 18:24). நீ தீர்மானிக்கும் கர்த்தராகிய இயேசுவினுடைய கிருபை உன்னோடிருப்பதாக! இயேசுகிறிஸ்துவை உன் இரட்சகராக நம்பிட நீ விரும்பினால், இந்த ஜெபத்தை (வார்த்தைகளை) உன் இருதயத்தில் தேவனோடு பேசு: “தேவனே, எனக்கு நீர் தேவை. தயவுசெய்து நான் செய்தவை எல்லாவற்றையும் மன்னியும். என் விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கிறேன். மேலும் அவரே என் இரட்சகர் என்று நம்புகிறேன். தயவுசெய்து என்னைக் கழுவி, சுகமாக்கி, என் வாழ்வில் சந்தோசத்தைத் திரும்பித்தாரும். என் மேல் நீர் வைத்திருக்கிற அன்பிற்க்காகவும், எனக்குப் பதிலாக இயேசுவின் மரணத்திற்காகவும் நன்றி கூறுகின்றேன்.”

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page